துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'காலா' படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் அறிவு. 'தெருக்குரல்' என்ற ஆல்பத்தை வெளியிட்டதால் தெருக்குரல் அறிவு என்றும் அழைக்கப்படுபவர். ராப் பாடல்களைப் பாடிப் பிரபலமானவர். கடந்த ஆறு வருடங்களில் நிறையப் பாடல்களைப் பாடிவிட்டார்.
இன்று சென்னையில் உள்ள அம்பேத்கார் மணிமண்டபத்தில் அவர் திருமணம் செய்து கொண்டார். இசையமைப்பாளர் இளையராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் அவரது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.