ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பல நட்சத்திர பாட்டாளங்களுடன் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'கூலி'. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்குகிறது. இதற்காக ரஜினி சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த படத்தை ஏற்கனவே இந்தாண்டு மே 1ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதே தேதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 23வது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இரு படங்களும் இன்னும் முடியவில்லை. அதனால் ரிலீஸில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.