துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
ஹனிப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி வெளிவந்த மலையாளப் படம் 'மார்க்கோ'. இப்படத்தில் அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'ஏ' சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.
தற்போது படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்கள், தெலுங்கு மாநிலங்களிலும் இப்படம் வெளியாகி குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது.
மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடந்த 9வது படமாக இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது. 'மஞ்சும்மேல் பாய்ஸ்' அதிகபட்சமாக 240 கோடியை வசூலித்துள்ளது. “2018, தி கோட் லைப், ஆவேஷம், புலி முருகன், பிரேமலு, லூசிபர், ஏஆர்எம்' ஆகிய படங்கள் இதற்கு முன்பு 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் 'மஞ்சும்மேல் பாய்ஸ், தி கோட் லைப், ஆவேஷம், பிரேமலு, ஏஆர்எம், மார்க்கோ' ஆகிய ஆறு படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வேறு எந்து ஆண்டிலும் இத்தனை படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை.