கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் | மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! |
'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய பத்து வயது மகன் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சிறப்புக் காட்சியில் மரணம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில், இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வு கிடையாது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த வார வெள்ளிக்கிழமை 'கேம் சேஞ்சர்' மற்றும் அடுத்த வாரம் சங்கராந்தியை முன்னிட்டு 'டாகு மகாராஜ், சங்கராந்தி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அப்படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி, டிக்கெட் கட்டண உயர்வு ஆகியவற்றை ஆந்திர மாநில அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தெலங்கானா அரசு ஏற்கெனவே அறிவித்த அறிவிப்பைத் தொடரப் போகிறதா அல்லது இறங்கி வருமா என திரையுலகினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், 'கேம் சேஞ்சர், சங்கராந்தி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதனால், அவர் முயற்சி செய்து அனுமதி வாங்கிவிடுவார் என தெலுங்குத் திரையுலகினர் நம்புகிறார்கள்.
இந்த அனுமதி விவகாரத்தில் தெலங்கானா அரசு கண்டிப்புடன் தொடரப் போகிறதா அல்லது கனிவாக நடந்து கொள்ளுமா என ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.