இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தமிழ் சினிமாவில் வெளிவராமல் முடங்கிப் போன படங்கள் என எடுத்துக் கொண்டால் அந்த கணக்கே 500 படங்களைத் தாண்டும். ஆனால், சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வெளிவராமல் சிக்கலில் முடங்கியிருப்பது அதிர்ச்சிகரமான ஒன்று.
12 வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவர உள்ள 'மத கஜ ராஜா' படம் வெளிவர உள்ளது. இதையடுத்து முடங்கிப் போயுள்ள சில படங்களுக்கு விமோசனம் கிடைக்காதா என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படம் முடிந்தும் சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள், ஆனால், வெளியாகவில்லை.
அது போல கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ள 'நரகாசூரன்' படமும் முடங்கி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதன்பின் ஓடிடி தளத்தில் கூட நேரடியாக வெளியிட முயற்சித்தார்கள், அதுவும் நடக்கவில்லை.
இது போல இன்னும் சில படங்கள் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயாராகியும் வெளியாகாமல் உள்ளன. அந்தப் படங்களின் மூலம் பல கோடிகள் முடங்கிக் கிடக்கிறது.