ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
பொங்கலுக்கு 'விடாமுயற்சி' படம் வெளிவரவில்லை என்ற அறிவிப்பு வந்ததும் சுமார் 10 படங்களின் வெளியீட்டு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவந்தன. ஆனாலும், கடைசியாக நேற்று வெளிவந்த 'மத கஜ ராஜா' பட அறிவிப்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
சமூக வலைத்தளங்களில் நேற்று அந்தப் படம் குறித்த மீம்ஸ்களும், இணைய உலகில் அப்படம் குறித்த செய்திகளும் அதிகம் வெளிவந்தன. 12 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படம் வெளிவருவதுதான் அதற்குக் காரணம். தமிழ் சினிமா உலகில் இத்தனை வருட தாமதமாக வேறு எந்தப் படமும் வெளியானதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
'மத கஜ ராஜா' படமே வெளியே வருகிறது, 'துருவ நட்சத்திரம்' படத்தையும் எப்படியாவது வெளிய கொண்டு வந்துவிடுங்கள்,” என்றும் பல மீம்ஸ்கள் வெளிவந்தன. அந்தப் படத்தில் விஷால் பாடிய பாடல் ஒன்றின் வீடியோவும், படத்தில் வரலட்சுமி, அஞ்சலி நடனமாடி பாடல் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவின.
போகிறபோக்கைப் பார்த்தால் புதிய படங்கள் அனைத்தையும் மிஞ்சி 'மத கஜ ராஜா' பொங்கல் வெளியீட்டில் வெற்றியைப் பறித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.