நாளை வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு! | அஜித்குமார் உடல் எடையை குறைத்தது எப்படி! - சீக்ரெட்டை வெளியிட்ட ஆரவ் | திரைக்கு வந்து ஒன்பது நாட்களில் 13 கோடிக்கு மேல் வசூலித்த குடும்பஸ்தன்! | வேட்டையன் வில்லன் ராணாவை இயக்கும் பி.எஸ்.மித்ரன்! | பிப்ரவரி 6ல் ஒரே படம், பிப்ரவரி 14ல் 7 படம் ரிலீஸ் | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்கான காரணம் சொன்ன தில் ராஜு | பிளாஷ்பேக்: பி பி ஸ்ரீநிவாஸ் திரையிசைப் பயணத்தில் வசந்தம் வீச வைத்த “காலங்களில் அவள் வசந்தம்” | உதட்டில் முத்தம் - சர்ச்சையில் பாடகர் உதித் நாராயண் | பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வைரல் கிளிக்ஸ் | உலக தரத்தில் எம்புரான் டீசர் ; பிரபாஸ் பாராட்டு |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் மிகப்பெரிய அளவில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் 'கேம் சேஞ்சர்'. வரும் சங்கராந்தி பண்டிகை ரிலீஸ் ஆக பான் இந்தியா படமாக இது வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர்.
அப்படி ஒரு நிகழ்வில் ஷங்கர் பேசும்போது, “இந்த கேம் சேஞ்சர் படத்தை கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலத்தான் எடுத்திருக்கிறேன். காரணம் இன்றைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது போல அடுத்தடுத்து என உடனுக்குடன் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களை திருப்திப்படுத்தும் விதமாகத்தான் இந்த கேம் சேஞ்சரை உருவாக்கியுள்ளேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் தொடர்ந்து தென்னிந்திய படங்களை கவனித்து வருபவரும் நல்ல படங்களை பாராட்டி புகழ்பவருமான பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்க்கு ஷங்கர் இப்படி இன்ஸ்டாகிராம் ரிலீஸ் போல படம் எடுத்து உள்ளேன் என்று கூறியது பிடிக்கவில்லையாம். இதில் அவருக்கு மிகப்பெரிய வருத்தம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஷங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குனர் இப்படி சொன்னது வருத்தம் அளிக்கிறது. அப்படி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல எடுத்திருக்கிறேன் என்றால் ரசிகர்கள் விரும்புவது போல படம் எடுக்க ஒரு இயக்குனர் தன்னை மாற்றிக் கொண்டதாக ஆகிவிடும். நல்ல உணவை ஒருவருக்கு வழங்குவதில் இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று ஒரு கிரியேட்டராக இருந்து சூப்பரான உணவை சமைத்துக் கொடுப்பது.. அல்லது பரிமாறுபவராக இருந்து அவர்கள் கேட்கும் உணவை பரிமாறுவது. இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.