இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் அஜித் தற்போது ஒரே சமயத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசியில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அஜித் இந்த படத்தின் டப்பிங்கை முடித்துக் கொடுத்தார். அதே சமயம் குட் பேட் அக்லி படமும் இன்னொரு பக்கம் முடிந்து விட்டது. அஜித்தின் குடும்பம் தற்போது புத்தாண்டை கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் கிளம்பி சென்றுள்ளனர்.
அவர்கள் சென்னை விமான நிலையத்தில் உள்ளே செல்லும் வீடியோவும் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.