எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
2025ம் ஆண்டு பிறந்துவிட்டது. உலகம் முழுக்க ஆங்கில புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கமல்
நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛2025ல் நாம் அடியெடுத்து வைக்கும் இத்தருணம், இப்பாதையை நமதாக்கிக் கொண்டு ஒரு சிறந்த அத்தியாயத்தை எழுதுவதற்கான நேரம். புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது என்பது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வது. நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!'' என குறிப்பிட்டுள்ளார்.
சிம்பு
நடிகர் சிம்பு வெளியிட்ட பதிவில், ‛‛நீங்கள் உங்கள் ஆன்மாவிற்குள் பிரபஞ்சத்தை சுமக்கிறீர்கள். பிரகாசிக்கட்டும். HappyNewYear2025'' என குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவில், ‛‛அனைவருக்கும் மகிழ்ச்சி, வளர்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்த அருமையான புத்தாண்டு வாழ்த்துக்கள். 2025ஐ சிறப்பானதாக மாற்றுவோம். HappyNewYear2025'' என பதிவிட்டுள்ளார்.
பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா வெளியிட்ட பதிவில், ‛‛உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் வெளியிட்ட பதிவில், ‛‛அனைவருக்கும் மகிழ்ச்சியான இசை புத்தாண்டு வாழ்த்துகள், HappyNewYear2025'' என பதிவிட்டுள்ளார்.