வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
மலையாளத்தில் இந்த ஆண்டில் வெளியான பிரம்மயுகம், மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேஷம், வர்ஷங்களுக்கு ஷேஷம், பிரேமலு, ஆட்டம், குருவாயூர் அம்பலநடையில், உள்ளொழுக்கு, வாழ, ஏஆர்எம், கிஷ்கிந்தா காண்டம் உள்ளிட்ட சில படங்கள் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்தது. இவற்றில் மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேஷம், பிரேமலு, ஏஆர்எம் படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் பல படங்கள் தோல்வி அடைந்து பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் கோடி கணக்கில் சம்பளம் பெற்ற நடிகர்கள் பணத்தை திருப்பி தரவேண்டும் என்று மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2024ம் ஆண்டில் மலையாளத்தில் 199 படங்கள் திரைக்கு வந்து 26 படங்கள் மட்டுமே லாபம் பார்த்துள்ளன. இந்த படங்களின் தயாரிப்பு செலவு 1000 கோடி. ஆனால் இந்த படங்களின் மூலம் 350 கோடி மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. 650 கோடி முதல் 700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் ஏற்கவில்லை. இது தொடர்ந்தால் மலையாள சினிமா துறை பெரிய இழைப்பை சந்திக்கும். இதனால், நஷ்டம் அடைந்த படங்களின் நடிகர்களும், உதவி செய்ய முன்வரும் நடிகர்களும் தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஈடு செய்ய உதவ வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.