ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2024ம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்தில் முடிய இருக்கிறது. இந்த வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 27ம் தேதி சுமார் 10 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. எப்போதுமே கடைசி வாரத்தில் இத்தனை படங்கள் வருவது வழக்கம். அதுபோல் இந்த வருடமும் வெளியாக உள்ளது.
இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். “அலங்கு, பீமா சிற்றுண்டி, இது உனக்கு தேவையா, கூரன், மழையில் நனைகிறேன், நெஞ்சு பொறுக்குதில்லையே, ராஜாகிளி, திரு மாணிக்கம், த ஸ்மைல் மேன், வாகை” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றோடு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று மோகன்லால் இயக்கி நடித்துள்ள 'பரோஸ் 3டி' படம், மற்றும் கிச்சா சுதீப் நடித்துள்ள கன்னடப் படமான 'மேக்ஸ்' ஆகியவை தமிழில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
இந்த வாரம் டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களுடன் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 230ஐக் கடந்துவிடும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் 10 படங்கள் குறைவாக வெளியாகி உள்ளது.