ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

தெலுங்குத் திரையுலகத்தில் வெளியாகும் சில படங்கள் 1000 கோடி வசூல் சாதனையை பெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அந்தப் படங்கள் வெளியாகும் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெரிய படங்கள் வெளியாகும் ஒரு வாரத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இருந்தது. மேலும், அவற்றிற்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ளவும் அம்மாநில அரசுகள் அனுமதி அளித்தது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடந்த போது நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் பெண் ஒருவர் அகால மரணம் அடைந்தார். அதையடுத்து தெலங்கானா மாநில அரசு இனி, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வும் கிடையாது என அறிவித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்து வெளியாக உள்ள தெலுங்குப் படங்களுக்கு அந்த வாய்ப்பு பறி போய்விட்டது. இதனால், அந்த பெரிய படங்களின் வசூல் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இப்படியான டிக்கெட் கட்டண உயர்வினால்தான் அவர்கள் 1000 கோடி, 1500 கோடி என பிரமோஷன் செய்து வருகிறார்கள். இனி அப்படி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பொங்கலுக்கு ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது அந்தப் படத்திற்கு டிக்கெட் கட்டண உயர்வு, சிறப்புக் காட்சிகள் அனுமதி கிடைக்காது. படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார். 'கேம் சேஞ்சர்' படத்தின் தயாரிப்பாளராக அவர் இருப்பதால் எப்படியும் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




