ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் சூர்யா நடித்து கடந்த 10 வருடங்களாக திரைக்கு வந்த எந்தவொரு படமும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக சூர்யா நடித்து கடைசியாக ‛கங்குவா' படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் ஓடிடியில் சூர்யா நடித்து வெளிவந்த ‛சூரரைப் போற்று, ஜெய் பீம்' என இரு படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. அப்போது 300 ரசிகர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து ரசிகர்களிடம் போட்டோ எடுத்து அவர்களிடம் உரையாடினார். அப்போது சூர்யா கூறியதாவது, "எனது ஒவ்வொரு படம் வெளியீட்டிற்கான இடைவெளி அதிகமாக உள்ளது. இது உங்களுக்கு வருத்தமாக இருக்கும். இனிமேல் ஒரு வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாகும் என உறுதியாக சொல்கிறேன்" என இவ்வாறு சூர்யா உறுதியாக பேசியதால் ரசிகர்கள் உற்சாகமாக இது குறித்து பகிர்ந்து வருகின்றனர்.