ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
நகைச்சுவை நடிகர் சூரி தமிழில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளிவந்த 'விடுதலை 1' படத்தின் மூலம் சூரி கதையின் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 என கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்துள்ளார்.
தற்போது அளித்த பேட்டி ஒன்றில் சூரி கூறியதாவது, "அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். இனி கதையின் நாயகன் ஆகவே என் பயணம் தொடரும். நல்ல கதை அமைந்தால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன். ஆனால், அந்த படத்தில் ஹீரோ யார் என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எப்போதும் ஹீரோ என் தம்பி சிவகார்த்திகேயன் தான்" என தெரிவித்துள்ளார்.