மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அதன்படி சிறந்த படமாக 'அமரன்' படத்திற்கு விருது கிடைத்தது. 'மஹாராஜா' படத்தில் நடித்த விஜய்சேதுபதி சிறந்த நடிகராகவும், 'அமரன்' படத்தில் நடித்த சாய் பல்லவி சிறந்த நடிகையாகவும் தேர்வாகி விருதுகள் பெற்றனர். மெய்யழகன்' படத்திற்காக 'மக்களுக்கு பிடித்த நடிகர்' என்ற பிரிவில் விருதை அரவிந்த்சாமி வென்றார்.
'வேட்டையன்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது, துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டது. லப்பர் பந்து படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் தினேஷ் வென்றார். 'வாழை' படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பொன்வேலுக்கு வழங்கப்பட்டது.
மற்ற விருது விபரங்கள் வருமாறு:
சிறந்த சமூக படம்: லப்பர் பந்து
சிறந்த விழிப்புணர்வு படம் : நந்தன்
சிறந்த படத்திற்கான நடுவர்கள் விருது : ஜமா
சிறந்த படத்திற்கான நடுவர்கள் சிறப்பு விருது : வாழை
சிறந்த இயக்குனருக்கான நடுவர் விருது : பா.ரஞ்சித் (தங்கலான்)
சிறந்த இயக்குனர் : ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : சாய்(அமரன்)
சிறந்த எடிட்டர் : பிலோமின் ராஜ் (மஹாராஜா)
சிறந்த ஒலிப்பதிவாளர் : சூரன், அழகியகூத்தன் (கொட்டுக்காளி)
சிறந்த கலை இயக்குனர்: மூர்த்தி (தங்கலான்)
சிறந்த இசை அமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ் (அமரன்)
சிறந்த மக்கள் விரும்பும் நடிகை : அன்னா பென் (கொட்டுக்காளி)
சிறந்த இளம் கலைஞருக்கான அமிதாப்பச்சன் விருது : அருள்நிதி