வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

நடிகர் அஜித் நடிப்பில் இந்தாண்டு எந்த படமும் வெளியாகவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே என்றாலும் அடுத்தாண்டு அவரின் இரு படங்கள் வெளியாக உள்ளன. அந்தவகையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛குட் பேட் அக்லி' படத்தில் அஜித் நடித்து வந்தார். அவருடன் திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் இந்த படத்திற்காக அஜித் தனது எடையையும் குறைத்து ஸ்லிம்மாக உள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவில், “எனது கனவு நிறைவேறியது. எனக்கு வாழ்நாள் வாய்ப்பை தந்த அஜித்திற்கு நன்றி. லவ் யூ. இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இதுவொரு அழகான பயணமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
‛குட் பேட் அக்லி' படத்தை முடித்த கையோடு ‛விடாமுயற்சி' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் அஜித் பங்கேற்க உள்ளார்.




