ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஏ ஐ என்ற டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகைகளின் ஆபாச டீப் பேக் வீடியோக்கள் வெளியாவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா, சமந்தா மற்றும் சில பாலிவுட் நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தெலுங்கு நடிகையை பிரக்யா நாக்ராவின் டீப் பேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அது குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. வக்கிரம் பிடித்த சிலர் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். ஏற்கனவே இது போன்ற டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி பல நடிகைகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாத வகையில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,' என அந்த பதிவில் தெரிவித்துள்ள பிரக்யா நாக்ரா, ‛அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று எனக்கு ஆறுதல் சொன்ன ரசிகர்களுக்கு நன்றி' எனவும் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். தெலுங்கு நடிகையான இந்த பிரக்யா நாக்ரா, வரலாறு முக்கியம், நதிகளில் சுந்தரி யமுனா போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.