ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தந்தையை போல் நடிகர் ஆகாமல் தாத்தா எஸ்.ஏ சந்திரசேகர் வழியில் இயக்குனராக களமிறங்கி உள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கிய இவர் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட சென்னையில் தொடங்கி அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கை, பேங்காக் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.