விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

பாலிவுட் நடிகர் சோனு சூட் ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் இவர் பொது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தார். அதன் காரணமாகவே இவரை பல மாநிலங்களில் உள்ள மக்கள் ரியல் ஹீரோவாக  கொண்டாடினார்கள். 
இந்த நிலையில் மும்பையில் அமைந்துள்ள நடிகர் சோனு சூட்டின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருக்கிறது. அதையடுத்து பாம்பு பிடி வீரர்களுக்கு கால் செய்து அந்த பாம்பை பிடிக்காமல், தானே துணிச்சலுடன் அந்த பாம்பை ஓடிச் சென்று பிடித்து அதை ஒரு கோணிப்பைக்குள் போட்டுள்ளார் சோனு சூட். இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்து சோனு சூட்டின் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            