இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
பகவதி, சென்னை 28, சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும் என பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது கருப்பர் நகரம், பேபி அண்ட் பேபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் நடிகை பிரக்யா நக்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜெய், புதிய வாழ்க்கை ஆரம்பம் கடவுள் ஆசீர்வாதத்துடன் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பிரக்யா நக்ரா தனது கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்க, ஜெய் தனது கையில் பாஸ்போர்ட் புத்தகத்தை வைத்தபடி போஸ் கொடுக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது அவர்கள் திருமணம் செய்து செய்து கொண்டு வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்ல தயாராகி விட்டது போன்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தற்போது ஜெய்யும், பிரக்யாவும் இணைந்து பேபி அண்ட் பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படப்பிடிப்பு தளத்தில்தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் சத்யராஜ், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு பப்ளிசிட்டி தேடும் முயற்சியாக இப்படி ஒரு புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.