ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தெலுங்கில் சேகர் கம்முலா டைரக்ஷனில் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 30 நாட்கள் தான் பங்கேற்றுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் ஏழு நாட்கள் மட்டுமே பகலில் நடைபெற்றது என்றும் மீதி நாட்கள் எல்லாமே இரவு நேர படப்பிடிப்பு தான் என்றும கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. பொதுவாகவே ராஷ்மிகா குறித்து வெளியாகும் வீடியோக்கள் என்றால் ஒன்று அவர் ஏர்போர்ட்டில் நுழைவது போலவும் இன்னொன்று ஜிம்மில் பயிற்சி செய்வது போலவும் தான் அதிக வீடியோக்கள் வெளியாகும்.
அந்த வகையில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் ராஷ்மிகா இரவு நேர படப்பிடிப்பு என்றாலும் ஒர்க் அவுட் பண்ணுவதற்கு தனியாக நேரம் ஒதுக்கி விடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் படப்பிடிப்புக்கு தயாராகும் முன்பாக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்த ராஷ்மிகா கிட்டத்தட்ட 100 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்துள்ளார். இது குறித்த விவரமான தகவல்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா. 100 கிலோ எடை என்று அவர் சொன்னாலும் கூட அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது 80 கிலோ வெயிட்டை அசால்டாக தூக்கி உள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது.