ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வரும் அஜித் குமார், மே ஒன்றாம் தேதியான இன்று தன்னுடைய 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு, அஜித்தின் பிறந்தநாள் ஹேஷ்டேக்கும் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில் அஜித்தின் மனைவியான ஷாலினி அவருக்கு தனது 53வது பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த டுகாட்டி பைக் வழங்கியிருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஷாலினி. மேலும் அஜித் குமார் ஒரு மிகப்பெரிய பைக் பிரியர் என்பதும், பைக்கிலேயே அவர் உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.