லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொந்தமாக புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டிற்கு ரஜினிகாந்த், லதா ஆகியோர் சென்று பார்த்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யாவின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் அப்போது உடனிருந்துள்ளனர்.
நடிகர் தனுஷ் உடனான திருமண வாழ்வை முறித்த நிலையில் போயஸ் கார்டனில் உள்ள தனது அப்பா ரஜினிகாந்த் வீட்டில்தான் வசித்து வந்தாராம் ஐஸ்வர்யா. தனக்கென தனி வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல். தற்போது அந்த வீட்டிற்கான இன்டீரியர் வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் அந்த வீட்டிற்கு குடி போக உள்ளாராம் ஐஸ்வர்யா. அவருடன் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் செல்வார்கள் எனத் தெரிகிறது.