இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். பின்னர் 'மீன் குழம்பும் மண் பானையும்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரம் நகர்கிறது', கமலின் 'விக்ரம்' உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை காதலித்து வந்தார்.
பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், நடிகை அபர்ணா பாலமுரளி, இயக்குநர் சுதா கொங்கரா உட்பட திரையுலகினரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரணி திருமணம் இன்று கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்றிருக்கிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது. இதில் நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ் மற்றும் அவரது மனைவி டி.வீணா மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.