மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் | பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் |
சமீபத்தில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யத் தவறி தோல்வி படமாக அமைந்தது. குறிப்பாக அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா நடித்த ஒரு படம் மீண்டும் மிகப்பெரிய அளவு கடும் விமர்சனத்திற்கும் கிண்டலுக்கும் ஆளானது என்றால் அது கங்குவா திரைப்படமாக தான் இருக்கும். சூர்யா தான் விரும்பி பணியாற்ற நினைக்கும் இயக்குனர்கள் குறித்தும் சூர்யாவுக்கு அவர்கள் மூலமாக கிடைத்தது என்ன அவரது தம்பி கார்த்திக்கு கிடைத்தது என்ன என்கிற ஒப்பீடு பற்றியும் ஒரு மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது இயக்குனர் சிவா தமிழில் சிறுத்தை என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடித்து, படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கார்த்திக்கு மிகப்பெரிய கமர்சியல் அந்தஸ்தையும் தேடிக் கொடுத்தது. அதேபோல அதற்கு முன்னதாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். வணிக ரீதியாக படம் போகவில்லை என்றாலும் கார்த்தி வளர்ந்து வந்த கட்டத்தில் அவரது இரண்டாவது படமாக உருவாகி அவரது நடிப்புப் பாதையை விசாலப்படுத்தி கொடுத்ததுடன் இப்போது வரை ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வரும் அளவிற்கு மதிப்புக் குறையாமல் இருக்கிறது. ஆனால் அதே செல்வராகவன் தான் சூர்யாவுக்கு என்ஜிகே என்கிற ஒரு தோல்வி படத்தை கொடுத்தார்.
அதேபோல இயக்குனர் லிங்குசாமி பையா என்கிற படத்தை கார்த்தியை வைத்து இயக்கினார். அதுவரை முரட்டுத்தனமாக இருந்த கார்த்திக்கு சாக்லேட் பாய் என பெயர் பெற்று தந்ததுடன் அவரை ஆக்சன் ஹீரோவாகவும் அந்த படம் மாற்றி காட்டியது. ஆனால் அதீத தன்னம்பிக்கையுடன் இயக்குனர் லிங்குசாமி சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் அவர்கள் இருவரின் வாழ்க்கையையுமே புரட்டிப் போட்டது.
இந்த வரிசையில் கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் என்கிற வெற்றி படத்தை கொடுத்தார் இயக்குனர் பாண்டிராஜ். அதே நம்பிக்கையில் தான் அவருக்கு எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் சூர்யா. ஆனால் சூர்யாவின் நம்பிக்கை பொய்த்து போனது. இப்படி தம்பிக்கு ஹிட் கொடுத்த இயக்குனர்கள் எல்லாம் அண்ணனுடன் இணைந்து பணியாற்றும் போது சொதப்பி விட்டார்களே என ஒரு மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.