டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நவரச கலைக்கூடம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‛நெஞ்சு பொறுக்குதில்லையே'. இந்த படத்தில் அன்பே வா, பாவம் கணேசன், சில்லுனு ஒரு காதல் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.
நாயகிகளாக 'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்த புவனேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் சூரியவம்சம், என்றென்றும் புன்னகை, எங்க வீட்டு மீனாட்சி போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த நித்யாராஜ் இருவரும் அறிமுகமாகிறார்கள். மற்றும் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள். பாடல்களுக்கு எம்.எல்.சுதர்சன் இசை அமைக்கிறார், ஜெயகுமார் பின்னணி இசை அமைக்கிறார், அப்துல் கே.ரகுமான் ஒளிப்பதிவு செய்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற புனைப் பெயரில் பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். படம் பற்றி இயக்குனர்கள் கூறும்போது “வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து சமுகத்தில் நடக்கும் அவலங்களையும், இன்று இளைஞர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் ஒரு சமுக சிந்தனை உள்ள திரைப்படம் இது. படப்பிடிப்பு முழுவதும் கேரளா மாநிலத்தின் புனலூர், உப்புகுளி உள்ளிட்ட இயற்கை எழில் நிறைந்த மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது” என்றனர்.




