குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நயன்தாராவின் டாக்குமென்ட்ரி படத்தில் அவர் நடித்திருந்த நானும் ரௌடி தான் படத்தின் கிளிப்பிங்குகளை பயன்படுத்த அதன் தயாரிப்பாளர் தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டார். இந்த படத்தின் தயாரிப்பு சமயத்தில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் மூலம் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது இந்த படத்தில் தான் என்பதால் அவர் நானும் ரௌடி தான் படத்தின் சில காட்சிகளை தனது டாக்குமென்டரி படத்தில் இடம்பெற வேண்டும் விரும்பினார்.
தனுஷ் கடைசி வரை அதற்கு செவி சாய்க்க மறுத்ததால் தன்னை டார்கெட் வைத்து வீழ்த்த தனுஷ் முயற்சிக்கிறார் என்று மூன்று பக்கம் அறிக்கை மூலம் மிக பலமான குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார் நயன்தாரா. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் சரி திரையுலகினரிடமும் சரி ஆதரவு, எதிர்ப்பு என இருவருக்குமே சமமான நிலைப்பாடு எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் நயன்தாராவின் இந்த அறிக்கைக்கு மலையாள நடிகைகளான பார்வதி, ஐஸ்வர்ய லட்சுமி, நஸ்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் லைக் போட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக மலையாள திரையுலகில் நடிகைகளின் பிரச்னைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பார்வதி இந்த அறிக்கையை தன் பங்கிற்கு பகிர்ந்து கொண்டும் உள்ளார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இப்படி வெகு வேகமாக நயன்தாராவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்த இந்த நடிகைகள் எல்லோருமே தனுஷுடன் ஒவ்வொரு படத்தில் இணைந்து நடித்தவர்கள் தான். மரியான் படத்தில் பார்வதி, நையாண்டி படத்தில் நஸ்ரியா, ஜெகமே தந்திரம் படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி என ஆளுக்கு ஒரு படம் தனுஷுடன் நடித்துள்ளனர். இதில் நையாண்டி படத்தில் திடீரென கடைசி கட்ட படப்பிடிப்பிலிருந்து நஸ்ரியா சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போய்விட்டார் என்றும் அவர் புரமோஷன் நிகழ்ச்சிக்கு கூட வர மறுக்கிறார் என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமல்ல மரியான் படத்தில் கூட தனுஷுடன் இணைந்து மிக நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டிய சூழல் பார்வதிக்கும் ஏற்பட்டது.
அந்த வகையில் சம்பந்தப்பட்ட இந்த நடிகைகள், நயன்தாரா தங்களது சக நடிகை என்பதால் மட்டும் அதுவும் தங்கள் ஊரை சேர்ந்தவர் என்கிற பாசத்தால் மட்டும் இந்த ஆதரவை வழங்கியுள்ளார்களா ? இல்லை, தனுஷ் படங்களில் நடித்த போது அவர் மூலம் ஏதாவது கசப்பான அனுபவங்களை சந்தித்தார்களா ? அதன் வெளிப்பாடாகத்தான் நயன்தாராவிற்கு தங்களது ஆதரவை வழங்குகிறார்களா ? இதன் மூலம் தனுஷுக்கு தங்களது எதிர்ப்பை காட்ட நினைக்கிறார்களா என்றும் புதிய ஒரு விவாதம் தற்போது துவங்கி உள்ளது.