தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
இலங்கை தமிழ் தாய்க்கும், மலையாள தந்தைக்கும் மகனாக பிறந்த வேடன் என்கிற ஹிரன்தாஸ் முரளி. தற்போது கேரள மாநில இளைஞர்கள் கொண்டாடும் பாப் மற்றும் கானா பாடகராக இருக்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். ‛மஞ்சும்மல் பாய்ஸ், நரிவேட்ட' உள்ளிட்ட சில படங்களிலும் பாடி உள்ளார். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் படத்தின் மூலம் தமிழுக்கும் வர இருக்கிறார்.
இந்த நிலையில் வேடன் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. இளம் பெண் டாக்டர் ஒருவர் கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் வேடன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் பேரில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வேடன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தற்போது மேலும் 2 பெண்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இசை குறித்து ஆராய்ச்சி செய்வதாக கூறி கொச்சிக்கு வரவழைத்து வேடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரும், வேடன் இசை நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட தன்னை, பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக மற்றொருவரும் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் வேடன் போதை மருந்து பயன்படுத்திய ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. தொடரும் பாலியல் புகார்கள் குறித்து வேடனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.