ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை |
சினிமாவில் ரீ பிக்அப் என்ற ஒரு சொற்றொடர் அதிகம் பயன்படுத்தப்படும். அதாவது ஒரு படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறாது. ஆனால் படத்தை பார்த்த மக்களின் மவுத் டாக் மற்றும் மீடியாக்களின் விமர்சனத்தை தொடர்ந்து அந்த படம் மீண்டும் ஓடத் தொடங்கி விடும். ‛ஒரு தலை ராகம், பசி, சிறை, சேது' இப்படி பல படங்கள் அதற்கு உதாரணம்.
ஆனால் முதல் லேட் பிக்அப் படம் எது தெரியுமா, லியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 'பூம்பாவை'. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரை, பூம்பாவை என்ற இளம்பெண் காதலித்ததாக சொல்லப்படும் நாட்டுப்புற கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் ஒருவானது.
கதையை கம்பதாசன் எழுத, சோமையாஜுலு வசனம் எழுதினார். பாலாஜி சிங் என்பர் இயக்கினார். அவரது இயக்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத தயாரிப்பாளர், கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோர் இணைந்து இயக்க சொன்னார் என்றும் சொல்கிறார்கள். புருஷோத்தம் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு அட்டேபள்ளி ராமராவ் இசை அமைத்தார்.
யு.ஆர்.ஜீவரத்தினம் பூம்பாவையாக நடித்தார். கே.ஆர்.ராமசாமி திருஞானசம்பந்தராகவும் கே.சாரங்கபாணி, பூம்பாவையின் தந்தை சிவநேசனாகவும் டி.ஆர். ராமச்சந்திரன் ஏலேலசிங்கனாகவும் கே.ஆர். செல்லம் பொன்னம்மாளாகவும் நடித்தனர். மேலும் ஏ.ஆர்.சகுந்தலா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், டி.பாலசுப்ரமணியம், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.துரைராஜ், கே.பி.ஜெயராமன் என பலர் நடித்தனர்.
படத்தின் முதல் காப்பியை பார்த்த தயாரிப்பாளருக்கு படம் பெரிதாக பிடிக்கவில்லை. அவர் நினைத்த மாதிரி படம் வரவில்லை. எனவே இந்த படம் வரவேற்பை பெறாது என்று தீர்மானித்து 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டார். ஆனால் படம் வெளியான பிறகு படத்தை மக்கள் கொண்டாடினார்கள். மீடியாக்கள் பாராட்டியது. இதனால் அடுத்த வாரம் படத்தை நிறைய தியேட்டடர்களில் வெளியிட்டார். படமும் மகத்தான வெற்றி பெற்று, வசூலை குவித்தது.