சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தின் டிரைலர் நேற்று மாலை யு டியுப் தளத்தில் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிரைலரை வெளியிட்டனர்.
டிரைலர் வெளியான 15 மணி நேரங்களுக்குள்ளாகவே தென்னிந்திய மொழிப் படங்களைப் பொறுத்தவரையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. தற்போது 'புஷ்பா 2' தெலுங்கு டிரைலர் 38 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் மூலம் இதுவரையில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலராக இருந்த மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்' பட டிரைலரின் சாதனையை முறியடித்துள்ளது. அந்த டிரைலர் 24 மணி நேரத்தில் 37 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது.
'புஷ்பா 2' ஹிந்தி டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹிந்தி டிரைலர் தற்போது வரை 26 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் டிரைலர் 3 மில்லியன் பார்வைகளையும், பெங்காலி, மலையாளம் டிரைலர்கள் 4 லட்சம், கன்னட டிரைலர் 2 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளன.
24 மணி நேரம் முடிய இன்னும் சில மணி நேரங்கள் உள்ள நிலையில் அதன் பார்வைகள் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.
'புஷ்பா 2' டிரைலருக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யார் அமைக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் டிரைலரில் குறிப்பிடப்படவில்லை.