எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' |
சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் ஆடுஜீவிதம் என்கிற திரைப்படம் வெளியானது. பல வருடமாக தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் தாமதமாக வெளியானாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைத்ததன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள திரை உலகிற்கு திரும்பி இருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்தில் பாடலும் பின்னணி இசையும் கூட நன்கு பேசப்பட்டன.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பெரியோனே என்கிற பாடல் 2024ம் வருடத்திற்கான ஹாலிவுட் மியூசிக் அண்ட் மீடியா அவார்ட்ஸ் விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுகளுக்கு ஆடுஜீவிதம் படத்தில் இருந்து சிறந்த பாடல் என்கிற பிரிவில் பெரியோனே என்கிற பாடலும் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை என்கிற பிரிவில் பின்னணி இசைக்காகவும் என இரண்டு பிரிவுகளில் இந்த படம் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.