கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி |
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். சென்னையில் மட்டுமே தனது பெரும்பாலான தெலுங்குப் படங்களுக்கும் இசையமைக்கும் வேலைகளைப் பார்க்கும் தேவி ஸ்ரீ, அவ்வப்போது தமிழ்ப் படங்களுக்கும் இசையமைப்பார்.
நேற்று முன்தினம் வெளியான 'கங்குவா' படத்தில் தேவி ஸ்ரீயின் பின்னணி இசை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. அதிக இரைச்சலுடன் அவர் இசையமைத்துள்ளதாக பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து படத்தின் ஒலி அளவை தியேட்டர்களில் '2 பாயின்ட்' குறைக்கச் சொல்லியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேற்று தெரிவித்திருந்தார்.
அதே சமயம் நேற்று தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'குபேரா' படத்தின் டீசர் வெளியானது. ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்பதை டீசரைப் பார்க்கும் போதே தெரிகிறது. அதற்கேற்ற விதத்தில் சிறப்பான பின்னணி இசையை டீசருக்குக் கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
'கங்குவா' படம் வெளியாகி அவரைப் பற்றிய விமர்சனங்கள் வந்த மறுநாளே தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு 'குபேரா' டீசர் மூலம் பதில் கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.