நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. நாளை(நவ., 17) இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது, படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையமைக்கும் வேலைகளில் அவர் சரி வர கவனம் செலுத்தாமல் ஐதராபாத்தில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்தியதாக சொல்லப்பட்டது. அதனால், படத்தின் இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன் ஆகியோர் பின்னணி இசையமைக்கும் வேலைகளுக்காக நான்கு இசையமைப்பாளர்களை பணியில் அமர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியானது.
'புஷ்பா 2' படத்திற்கு தான் பின்னணி இசையமைப்பதாக கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது பேசியிருந்தார் தமன். நேற்று 'டாக்கு மகாராஜ்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவின் போது அவர் பேசுகையில், “நான் 'புஷ்பா 2' படத்தில் ஒரு சிறு பகுதிக்காக இசையமைக்கிறேன். சில இசையமைப்பாளர்கள் இப்படத்திற்காக பின்னணி இசையமைத்து வருகிறார்கள். இயக்குனரும், நாயகனும் எனது வேலையைப் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்கான பின்னணி இசை வேலைகளில் தமன் தவிர, சாம் சிஎஸ், அஜனீஷ் லோகநாத் மற்றும் ஒரு இசையமைப்பாளர் ஈடுபட்டுள்ளனர். இன்று அல்லது நாளை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.