வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
1930களின் இறுதி பகுதியில் புராண படங்கள் குறைந்து, ஆன்மிக குருக்களின் படங்கள் அதிக அளவில் வெளியானது. இந்த மாதிரி குருக்களின் வாழ்க்கையை மக்கள் பார்த்தில்லை என்பதால் அந்த படங்களுக்கு வரவேற்பும் இருந்தது. நந்தனார், பட்டினத்தார் படங்களின் வெற்றிக்கு அதுதான் காரணம். இந்த நிலையில் கோல்கட்டாவை சேர்ந்த ஆன்மிக குருவான 'துக்காராம்' வாழ்க்கையை தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்க சென்ட்ரல் ஸ்டூடியோ முன்வந்தது.
அப்போது ஆன்மிக குருக்கள் கேரக்டரில கர்நாடக சங்கீத வித்வான்களை நடிக்க வைப்பது வழக்கமாக இருந்தது. துக்காரம் கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்திலேயே ஒரு வாரம் ஓடியது. காரணம் துக்காராமின் தோற்றம் அப்படி. ஆன்மிக குருக்களில் அடர்த்தியான மீசை வைத்திருந்நதவர் அவர். ஆனால் கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு மீசை வைக்கும் வழக்கம் இல்லை. இதனால் பலரும் மீசை வைத்து நடிக்க மறுத்தார்கள். அதோடு அவர் கட்டுமஸ்தான தேகம் கொண்டவர். கடைசியாக கர்நாடக சங்கீத வித்வான் முசிறி சுப்ரமணிய அய்யரை பிடித்தனர்.
அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு ஒட்டு மீசை வைத்து நடித்தார். இதனால் அவரது உதடுகள் வீங்கி, அதன் மேல் பகுதி புண்ணானது. இதனால் நடிக்க மறுத்து அவர் படத்தை விட்டு வெளியேற விரும்பினார். ஆனால் பெரும் நஷ்டம் வரும் என்பதால் அவரை இயற்கையாக மீசை வளர்க்க சொல்லி அதற்காக காத்திருந்து பின்பு படமாக்கினார்கள். மீசை வைத்தற்காக பின்னாளில் அவர் தோஷ நிவர்த்தி யாகம் நடத்தியதாக சொல்வார்கள்.
படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதன்பிறகு வந்த பல வாய்ப்புகளை மறுத்து சினிமாவே வேண்டாம் என்று மீண்டும் இசைத் துறைக்கே சென்று விட்டார். இந்த படத்தில் அவருடன் சாரங்கபாணி, ஆர்.பாலசுப்ரமணியம், சொக்கலிங்க பாகவதர், பாலசரஸ்வதி உள்ளிட்ட பலர் நடித்தனர். மேற்குவங்க இயக்குனர் எஸ்.என்.ராவ் இயக்கினார். இதன் தெலுங்கு பதிப்பில் துக்காரமாக அங்குள்ள சங்கீத வித்வான் ஆர்.ஆஞ்சநேயலு நடித்தார்.