இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் வைரலானது. இதேபோல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. இதில் ஸ்ரீலீலா நடனமாடுவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றது என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதிலிருந்து அல்லு அர்ஜுன், ஸ்ரீ லீலா உள்ள போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.