கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
சினிமாவின் எல்லா சாதனைகளிலும் உச்சம் தொட்டவர் கமல். ஆனால் அவர் கடைப்பிடித்து வந்த கமலிசம், அரசியலில் வெற்றி பெறவில்லை. 2018ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் நாள் மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி 'மக்கள் நீதி மய்யம்' என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ''மக்களின் நீதியை மய்யமாக வைத்துத் தொடங்கப்பட்ட கட்சி இது. எந்தப் பக்கமும் ஒரேயடியாகச் சாய்ந்துவிட மாட்டோம். அதற்குத்தான் மய்யம் என்று கட்சிக்குப் பெயர் வைத்துள்ளோம்” என்று கட்சிப் பெயருக்கான விளக்கத்தைக் கூறினார். பின்னர் கட்சியின் கொள்கை, கொடி அறிமுக விளக்கம், கட்சிப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு என முறைப்படி தனது கட்சியை தொடங்கினார்.
'ஒவ்வொரு தேர்தலிலும் விரலுக்கு மை வைத்து வாக்களிப்பது ஒன்றுதான் எனது அரசியல்' என்று சொல்லி வந்தவர் கமல். 'சாக்கடையை சுத்தப்படுத்த சாக்கடைக்குள் இறங்க வேண்டியதில்லை' என்றும் சொன்னவர். அப்படிப்பட்டவர் அரசியல் கட்சி தொடங்கியது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை பிடித்து விடுவார் என்று யாரும் கணிக்கவில்லைதான்; ஆனால் அசைக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்றே மக்கள் கருதினார்கள். ஆனால் நடந்தது வேறு.
2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபாத் தேர்தலில் கட்சி ஆரம்பித்த ஓர் ஆண்டுக்காலத்திலேயே 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களைத் தனித்துக் களமிறக்கினார். போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் முதல் தேர்தலிலேயே 3.7 சதவீத ஓட்டுகளைப் பெற்றது ஆறுதலாக அமைந்தது. அதைத் தொடர்ந்து நடந்த 18 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட்டது கமல் கட்சி, அதிலும் வெற்றிபெறவில்லை.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பல சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார். கமல்ஹாசன் முதன்முறையாகக் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார். இதில் கட்சி, கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்தன. அவரே சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தற்போது இந்த தோல்விகளில் இருந்து தன்னால் மீண்டு வர முடியாது என்று கருதி, ஆளும் திமுகவுடன் தன்னை நெருக்கமாக்கி கொண்டார். வருகிற தேர்தலில் அவர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஒரு சில தொகுதிகளில் போட்டியிடலாம். அதில் ஒரு சில தொகுதிகளில் வெற்றியும் பெறலாம். என்றாலும் சினிமாவில் ஜெயித்த 'கமலிசம்' அரசியலில் தோற்றது என்பதே உண்மை.