வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
அறிமுகமான புதிதில் நடித்த ஒரு சில படங்கள், பின்னர் நடித்த முள்ளும் மலரும், ஒரு கை ஓசை, ஆறிலிருந்து அருபது வரை, எங்கேயே கேட்ட குரல் என்பது மாதிரியான சில படங்கள் தவிர பெரும்பாலான படங்களில் ரஜினி ஆக்ஷன் ஹீரோவாகவே நடித்தார்.
சில அழுத்தமான கதை அம்சமுள்ள படங்கள் ரஜினியை தேடி வரும்போது இதற்கு நான் செட்டாக மாட்டேன். நீங்கள் கமலை பாருங்கள் என்று அனுப்பி விடுவார். அப்படி ரஜினி அனுப்பிய பல கதைகளில் கமல் நடித்து அது பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறது. குறிப்பாக 'கல்யாணராமன்'. சில சிக்கலான கேரக்டர்களில் நடிக்க வேண்டி வரும்போது ரஜினி கமலிடம்தான் ஆலோசனை கேட்பார்.
குறிப்பாக 'முள்ளும் மலரும்' படத்தில் நடித்தபோது கமலுக்கு போன் செய்த ரஜினி “புது டைரக்டராக இருக்காரு படத்துல பெருசா டுவிட்ஸ்டும் இல்லை, பைட்டும் இல்லை இது சரிப்பட்டு வருமா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கமல் “மகேந்திரன் எங்கள் ஊர்காரர், எங்கள் குடும்ப நண்பர் அவர் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம். அவர் சொல்வதை அப்படியே செய்யுங்கள் போதும்” என்றார்.
இதே போன்று மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் ரஜினி நடித்தார். ஒழுங்கில்லாத உடைகள், பெரிய செருப்புகள், டல் மேக் அப் இவற்றுடன் நடிக்க வேண்டும். ரஜினியோ தலைப்பை பார்த்து விட்டு ஒரு கெத்தான படம் என்று கருதி படப்பிடிப்புக்கு சென்றார். அங்கு சென்ற பிறகுதான் இது வேற மாதிரியான கதை என்பது புரிந்தது. மணிரத்னம் தனது கேரக்டரில் அழுத்தமான உணர்வுகளை எதிர்பார்ப்பார். அதை ரஜினியால் செய்ய முடியவில்லை. இதனால் வெறுத்துப்போன மணிரத்னம், ரஜினி வேண்டாம், கமலை கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டார்.
பயந்து போன ரஜினி கமலுக்கு போன் செய்து விபரத்தை சொல்ல, “நீங்க எதையும் தனியா செய்யாதீங்க மணிரத்னத்தை நடித்து காட்ட சொல்லுங்க, அவர் நடித்து காட்டுவார் அதை அப்படியே செய்துடுங்க. முக்கியமா உங்க கேரக்டர்ல ரஜினி தெரியகூடாது. மணிரத்னம்தான் தெரியணும்” என்றார். இடையிடையிடையே அவ்வப்போது டிப்ஸ் கொடுத்தார். அதனால்தான் இன்றைக்கும் தளபதி படத்தில் ரஜினியின் நடிப்பு தனித்து தெரிகிறது. இந்த நிகழ்வுகளை ரஜினியே பல மேடைகளில் பகிர்ந்திருக்கிறார்.
தொழில் போட்டி இருந்தபோதும் இன்றைக்கும் ரஜினியும், கமலும் நல்ல நண்பர்களாக இருப்பதற்கு காரணம் ஒவ்வொருவரும் தங்களின் பலம், பலவீனம் இரண்டையும் புரிந்து வைத்திருப்பதுதான்.