ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குனர் மகேந்திரன், அவருக்கு பிடித்த படம் 'முள்ளும் மலரும்'. ஆனால் இந்த இரண்டுமே கமல்ஹாசன் இல்லை என்றால் சாத்தியமில்லை. திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்த மகேந்திரன் முதன் முதலில் இயக்கிய படம் 'முள்ளும் மலரும்'. ரஜினிகாந்த், ஷோபா, படாபட் ஜெயலட்சுமி நடித்திருந்தனர். பாலுமேகந்திரா ஒளிப்பதிவு, இளையராஜா இசை, ஆனந்தி பிலிம்ஸ் தயாரிப்பு.
இந்த படத்தின் பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்திருந்த நிலையில் படத்தின் பணிகள் நின்று போனது. காரணம் தயாரிப்பாளருக்கு இருந்த பண நெருக்கடி. இதனால் இனிமேல் என்னால் செலவு செய்ய முடியாது என்று கூறி தயாரிப்பாளர் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டார். 'செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலும் இன்னும் சில காட்சிகளும் படமாக்கப்பட வேண்டியது இருந்தது. ரஜினி அப்போது பிசியாக இருந்ததால் இந்த படத்தை விட்டுவிட்டு மற்ற படங்களில் கவனம் செலுத்தினார். அவர் சம்பந்தபட்ட காட்சிகள் எடுக்கப்பட்டும் விட்டது.
இந்த நேரத்தில் இதைப் பற்றி கேள்விப்பட்ட கமல்ஹாசன் அதுவரை எடுக்கப்பட்ட படத்தை பார்த்தார். ஆச்சர்யப்பட்டார். இது சில்வர் ஜூப்ளி படம் இதை ஏன் பாதியில் நிறுத்தி விட்டீர்கள் என்று கோபமடைந்தார். மீதி படத்தை தானே எடுத்து தருவதாக சொல்லி அதற்கான பணத்தை கொடுத்தார். 'முள்ளும் மலரும்' முழுதாக நிறைவடைந்து வெளியாகி கமல் சொன்னது போலவே சில்வர் ஜூப்ளி படமாகவும் அமைந்தது.