இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக்...டிக்...டிக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். துபாயை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நிவேதா பெத்துராஜிடம் ஒரு சிறுவன் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை 50 ரூபாய்க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் அவனுக்கு 100 ரூபாய் கொடுத்தேன். உடனே அந்த சிறுவன் என்னிடம் 500 ரூபாய் கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் திருப்பி கொடுத்து 100 ரூபாயை திரும்ப கேட்டேன். இந்த நேரத்தில் புத்தகத்தை என் காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டான். இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்னையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.