இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
தமிழ் சினிமாவின் ஆரம்ப பத்தாண்டுகளில், கடவுள்கள் மற்றும் துறவிகளை சுற்றி வரும் 'பக்தி' திரைப்படங்கள் பிரபலமாக இருந்தன. 1936-37ல் இது போன்ற படங்கள் அதிக அளவில் வெளிவந்தது. மகாத்மா கபீர்தாஸ், பட்டினத்தார், மீராபாய், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார், பக்த அருணகிரி, பக்த துளசிதாஸ், பக்த புரந்தரதாசர், பக்த ஜெயதேவா படங்கள் வந்தது. இவற்றில் முக்கியமானது 'பக்த ஸ்ரீ தியாகராஜா'
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் வெளியானது. மும்பையில் இருந்த சாகர் மூவிடோனால் தயாரிக்கப்பட்டது, வீரேந்திர தேசாய் இயக்கினார். தியாகராஜரின் பாடல்கள் அனைத்தையும் இசை அமைத்து பாடி வந்த மாதிரிமங்கலம் நடேச அய்யர், தியாகராஜராக பாடி, நடித்தார். படத்தில் மொத்தம் 32 பாடல்கள் இடம்பெற்றது. இதில் 2 தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. மற்றவை தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதத்தில் இருந்தது.
தியாகராஜரின் மனைவியாக கமலா நடித்திருந்தார். இவர்கள் தவிர சீதா, டி.பி.கே. சாஸ்திரி, சி.பி.எஸ். மணி ஐயர். எஸ்.கே. சுந்தரம், 'கவை' கல்யாணம், ஏ.தனபால் செட்டியார், வி.பி. சீனிவாசன், 'பேபி' கோகிலா, மாஸ்டர் பிரணதார்த்திஹரன், பத்மநாபாச்சார் மற்றும் ராஜகோபால ஐயர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், தியாகராஜர் வாழ்ந்த இடங்களுக்கே சென்று காட்சிகளை படமாக்கினார்கள். குறிப்பாக திருப்பதி கோவிலில் தியாகராஜர் நின்று பாடியபோது பகவான் திரை விலக்கி காட்சி அளித்ததாக அவர் வாழ்க்கை குறிப்பில் உள்ளது. அந்த காட்சியை திருப்பதி கோவிலுக்குள்ளேயே படமாக்கினார்கள். பிற்காலத்தில் திருப்பதி கோவிலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.