'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்தையே வெற்றி படமாக்கினார். அதன்பிறகு இவர் இயக்கத்தில் உருவான படம் ‛நரகாசுரன்'. 2017ல் உருவான இந்தப்படம் நிதி சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளால் 7 ஆண்டுகளாக இன்னும் வெளியாகவில்லை. அதன்பின் இவரது இயக்கத்தில் வெளியான ‛மாபியா, மாறன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.
அதன்பின் இவர் இயக்கத்தில் உருவான படம் ' நிறங்கள் மூன்று'. இதில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் இணைந்து பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2022ல் இந்த படம் துவங்கி கடந்தாண்டே ரிலீஸிற்கு தயாரானது. ஆனால் இந்த படத்திற்கும் ஒரு சில காரணங்களால் ஏற்பட்ட பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது. இப்போது பிரச்னைகளை தீர்த்து ஒருவழியாக ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற நவம்பர் 22ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.