வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
மும்பை : மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், 66, என்பவர் சமீபத்தில் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலே காரணம் என்றும், ஏற்கனவே பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததால், அவரை சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியானது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகன் ஜிஷானுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 20 வயது இளைஞரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர், மும்பை போக்குவரத்து போலீசாரின் உதவி எண் வாயிலாக மிரட்டல் விடுத்தார். அதில், 'நடிகர் சல்மான் கான் எனக்கு 2 கோடி ரூபாய் அளிக்காவிட்டால், நான் அவரை கொலை செய்து விடுவேன்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த மும்பையின் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த அசம் முகமது முஸ்தபா, 56, என்பவரை கைது செய்தனர்.