ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிஸியான முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தனது திருமண முறிவுக்கு பிறகும் மயோசிடிஸ் என்கிற நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாலும் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டு செலெக்ட்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதேசமயம் தன்னை லைம்லைட்டிலேயே தொடர்ந்து வைத்துக் கொள்ளும் விதமாக சோசியல் மீடியாவில் தான் கலந்து கொளும் நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள் என ஏதாவது தொடர்ந்து பகிர்ந்து கொண்டே வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஆங்கில எழுத்தாளரும் நாவலாசிரியருமான ருத்யார்டு கிப்ளிங் என்பவர் எழுதிய ஒரு செயுளை மேற்கோள் காட்டி சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் தன்னம்பிக்கை பெறுவதற்காக இதை தான் நான் மனதில் ஏற்றிக் கொள்கிறேன் என்று கூறி சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
இதைப்பார்த்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், “சமந்தா சொல்வது உண்மைதான். இவர் கூறியுள்ள இந்த செயுளை நான் அப்படியே என் வீட்டில் போட்டோ பிரேம் ஆக மாட்டி வைத்து உள்ளேன். எப்போதெல்லாம் எனக்கு உற்சாகம் இழப்பதாக தோன்றுகிறதோ அப்போது இதை பார்த்து தன்னம்பிக்கை ஏற்றிக் கொள்வேன்” என்று கூறியுள்ளார். அர்ஜுன் கபூரின் இந்த பதிலுக்கு சமந்தா வெள்ளை இதயம் கொண்ட எமோஜியை பதிலாக அளித்துள்ளார்.