டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை விக்ரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மாநாட்டுக்கு வரவிருக்கும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் விஜய்.
அந்த வகையில், இன்று விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‛‛பெயரை போல சில விஷயங்களை திரும்பத் திரும்ப சொல்லியாக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்த போகிறேன். காரணம் எல்லா வகையிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்பும் முக்கியம். ஆகவே மாநாட்டு பயணம் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். இரு சக்கர வாகன பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்பு கருதியே இதை சொல்லுகிறேன். அதேபோல வருகிற வழியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யாமல் வரவேண்டும்.
போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு மாநாட்டு பணிக்கான கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்து வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை 27- 10 -2024 நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம் என்று அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்திருக்கிறார்.




