கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
தமிழில் ஜோக்கர், ஆண் தேவதை என சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதையடுத்து விஜய் டிவியில் வெளியாகும் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் ஆன்மிக பயணங்கள் குறித்த புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த ரம்யா பாண்டியன் கடந்த ஓராண்டுக்கு முன்பு, லோகன் தவான் என்ற மாஸ்டரிடம் யோகா பயிற்சி பெற்று வந்தார். அதற்கான சான்றிதலும் பெற்றார். அதையடுத்து ஒரு வருடமாக அந்த யோகா மாஸ்டரை காதலித்து வந்த ரம்யா பாண்டியன், தற்போது பெற்றோர் சம்மதத்துடன் நவம்பர் 15ம் தேதி அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அவர்களது திருமணம் ரிஷிகேசில் கங்கை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு கோவிலில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தனது வருங்கால கணவருடன் தான் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் வீடியோ ஒன்றை இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் ரம்யா பாண்டியன். ஆனால் அந்த வீடியோவில் அவரின் வருங்கால கணவரின் முகம் சரியாக தெரியவில்லை. இந்த வீடியோ வைரலானது.