கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
பிரேமம் என்கிற தனது முதல் மலையாள படத்தின் மூலமாகவே மிகப்பெரிய அளவில் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் சேர்த்து ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை சாய்பல்லவி. அதைத்தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியதன் மூலம் தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். வதவதவென படங்களில் நடிக்காமல் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி தற்போது நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் சாய்பல்லவி. இது குறித்து தனிப்பட்ட பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சாய்பல்லவி கூறும்போது, “பாலிவுட்டை சேர்ந்த பிரபலம் ஒருவர் என்னிடம் ஒருமுறை பேசியபோது நீங்கள் தொடர்ந்து லைம்லைட்டில் இருப்பதற்காக ஒரு புரமோஷன் ஏஜென்சியை உங்களுக்கென நியமித்துக் கொள்ளலாமே.. நான் வேண்டுமானால் ஏற்பாடு செய்து தரவா என்று கேட்டார். ஆனால் அவரிடம் வேண்டாம் என மறுத்து விட்டேன். தொடர்ந்து என்னை பற்றிய செய்திகளே வெளியாகிக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்கு என் மீது போரடித்து விடும் என்று அவரிடம் கூறிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருக்க விரும்பும் நடிகைகள் மத்தியில் சாய்பல்லவி தான் ரொம்பவே வித்தியாசமானவர் என்று இப்போதும் நிரூபித்துள்ளார்.