டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாக இருக்கும் படம் கங்குவா. வரலாற்று பின்னணியில் பேண்டஸி படமாக இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது மும்பை, ஐதராபாத் என இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறி மாறி கலந்து கொண்டார் சூர்யா. சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சூர்யா. அதன் ஒரு பகுதியாக கச்சிபவ்லியில் உள்ள ஏஎம்பி சினிமாஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வந்தார் சூர்யா.
அப்போது சூர்யாவுடன் ஆர்வமாக செல்பி எடுப்பதற்கு முயற்சி செய்த இளைஞர் ஒருவர், சூர்யாவுக்கு பாதுகாப்பாக வந்த பவுன்சர்களால் ஓரமாக தள்ளி விடப்பட்டார். இதனை கவனித்த சூர்யா உடனடியாக பவுன்சர்களை தடுத்து அந்த ரசிகரை தன் பக்கமாக இழுத்து அவரிடம் இருந்து மொபைல் போனை வாங்கி தானாகவே அவருடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக் கொடுத்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இதே போல ஆந்திராவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர்கள் நாகார்ஜூனா மற்றும் தனுஷ் ஆகியோர் வந்தபோது இதேபோன்று ரசிகர்கள் செல்பி எடுக்கும் சமயத்தில் பவுன்சர்களால் தள்ளி விடப்பட்ட நிகழ்வுகள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தின. இதில் நடிகர் நாகார்ஜூனா அப்படி தள்ளிவிடப்பட்ட ரசிகரை தேடி கண்டுபிடித்து மறுநாளே விமான நிலையத்திற்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு மன்னிப்பு கேட்ட நிகழ்வும் நடந்தது. அந்த வகையில் ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள சூர்யாவின் இந்த செயல் அங்குள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.




