விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கங்குவா'. இப்படத்தின் தயாரிப்பாளர் கேஈ ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'கங்குவா' படம் 2000 கோடி வசூலிக்கும் என பேசியிருந்தார். இந்திய சினிமாவில் புதிதாக வெளியான படங்கள் அவ்வளவு வசூலைக் குவித்ததில்லை.
ஆமிர்கானின் 'டங்கல்' படம் சீன வெளியீட்டிற்குப் பிறகுதான் 2000 கோடி வசூலைக் கடந்தது. அதற்கடுத்து தெலுங்குப் படமான 'பாகுபலி 2' 1800 கோடி வசூலைப் பெற்றுள்ளது. தமிழில் அதிகபட்சமாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் 800 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
'கங்குவா' படம் 2000 கோடி வசூலிக்குமா என நேற்று ஐதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு சூர்யா, “பெரிய கனவு கண்டால் அது குற்றமா?. அந்தக் கனவு வெளிப்படுவதை நம்புகிறேன், இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன், அது நடக்கட்டும். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என பதிலளித்தார்.
மற்ற தமிழ்ப் படங்களை விடவும் 'கங்குவா' படத்தை பல ஊர்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தி படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.