லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ரஜினிகாந்த் நடிப்பில் த.செ ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில் என ஒவ்வொரு திரையுலகை சேர்ந்த முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். குறிப்பாக இதில் நடிகர் ராணா இடைவேளைக்குப் பிறகு தான் என்ட்ரி கொடுத்தாலும் படத்தின் மெயின் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். படத்தின் கதைக்கு எந்த அளவிற்கு இவர் கதாபாத்திரம் தேவையோ அந்த அளவிற்கு மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் பேசப்பட்டவர் தெலுங்கு இளம் நடிகர் நானி தான் என்றும் படத்தில் இந்த கதாபாத்திரம் வரும் நேரம் ரொம்பவே குறைவாக இருப்பதாக கருதியதால் இந்த படத்தில் நடிக்க நானி மறுத்துவிட்டார் என்றும் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல படம் பார்த்த நானியின் ரசிகர்கள் நல்ல வேலையாக இந்த கதாபாத்திரத்தில் நானி நடிக்கவில்லை என்றும் எப்போதுமே அவரது கதாபாத்திர தேர்வுகள் சிறப்பாக இருந்து வருகிறது என்றும் கூறி வருகின்றனர்.