இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகின்றார். 'டாவுன் பிக்சர்ஸ்,வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று முடிவடைந்தது.
இந்த நிலையில் இட்லி கடை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் துவங்கியது. இந்த படத்தில் கதாநாயகியாக திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷூடன் இணைந்து நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இட்லி கடை படப்பிடிப்பில் இணைந்ததாக தனுஷூடன் டீ க்ளாஸ் உடன் போட்டோ பதிவிட்டு, 'புதிய அறிவிப்பு' என வெளியிட்டுள்ளார்.
அதேபோல், நடிகர் அருண் விஜய்யும் நடித்து வருவதாக தகவல் வெளியானது. அவரும் 2ம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். அருண் விஜய் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் "Excited on the new journey" என தனுஷின் ராயன் படத்தில் இடம்பெற்ற பாடலுடன் பதிவிட்டுள்ளார்.